Tuesday, 26 January 2016

ராசி வீடுகள்

ராசி வீடுகள்



ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளும் வாழ்வின் பல்வேறு கூறுகளை விவரிக்கின்றன. இவற்றுள் முக்கிய வீடு முதல் வீடு எனும் லக்னம் ஆகும். மற்ற 11 வீடுகளும் லக்கினத்தைப் பொருத்தே அமையும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் லகனத்திற்கு கீழ் படிபவை.
கேந்திரம்;:
1, 4, 7, 10-ம் வீடுகள் கேந்திர வீடுகள் ஆகும். இவை விஷ்ணு கேந்திரம் எனப்படும்.
1-ம் வீடு ஜாதகரைக் குறிக்கிறது.
4-ம் வீடு தாய், வீடு, வாகனம்,
7-ம் வீடு மனைவி, பங்குதாரர்
10-ம் வீடு தொழிலைக் குறிக்கிறது.
எனவே 4 வீடுகளுமே வாழ்க்கையின் முக்கிய கூறுகளை சொல்கின்றன. கேந்திரத்தில் உள்ள கிரகங்களும் அதன் அதிபதிகளும் நன்மையைச் செய்வர் எனபது உறுதி. தேக சுகவிஷயங்களை குறிப்பவை கேந்திரங்கள் ஆகும். சுபர்கள்(குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன்)  1.4.7 அல்லது 10-ம் வீட்டிற்கு அதிபதியாதல் கேந்திராதிபத்திய தோஷம் ஆகும்.
திரிகோணம்:
1, 5. 9, திரிகோண வீடுகள். மிகவும் சுபமான வீடுகள், மனோ ரீதியான செயல்பாடுகளை விளக்கும். இவை லஷ்மி ஸ்தானங்கள் என அழைப்பர். திரிகோணாதிபதிகள் சுபத்தையே தருவர். கேந்திரம் மற்றும் கோணத்தில் உள்ள கிரகங்கள் ஜாதகரின் உடல் நலம், அந்தஸ்து, தனம், முன்னேற்றம், நடத்தை, ஆகிய முக்கிய குணங்களை முடிவு செய்ய வல்லவை.
பணபரம் :
2,5,8,11-ம் வீடுகள் பணம் வருவதைச் சொல்லும்.
2-ம் வீடு தனஸ்தானம்
5-ம் வீடு பூர்வ புண்ணியஸ்தானம்
8-ம் வீடு ரந்த்ர ஸ்தானம்
11-ம் வீடு லாப ஸ்தானம் ஆகும்.
ஆபோக்லீயம் :
3, 6, 9, 12-ம் வீடுகள் ஆபோக்லீயம் வீடுகள் ஆகும். நிலையற்றவை எனப் பொருள்படும். 3, 6, 12-ல் உள்ள சுப கிரகங்கள் நன்மை செய்ய மாட்டார்கள். ஆனால் பாவங்கள் நன்மையைச் செய்யும்.
உபஜெய வீடுகள்:
3 6 10 11-ம் வீடுகள் உப ஜய வீடுகள் ஆகும். வெற்றிக்கு உறு துணையாக உள்ள வீடுகள் ஆகும்.
3-ம் இடம்- வீரம், வெற்றியைக் குறிக்கும்.
6-ம் இடம்- எதிரிகள், வழக்கு, கடன்.
10-ம் இடம்- தொழில்
11-ம் இடம்- லாபஸ்தானம் ஆகும்.
ஆகவே இவ்வீடுகள் வெற்றிக்கு துணை செய்யும் வீடுகள் ஆகின்றன.
ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரக ஸ்தானம்:
3 8-ம் வீடுகள் ஆயுளைக் குறிப்பவை.
2 7-ம் வீடுகள் மரணத்தைக் குறிக்கும். ஆயுள் ஸதானங்களாகிய 3 8-ம் வீடுகளுக்கு 12-ல் உள்ளன. எனவே மாரகம் செய்கின்றன.
மறைவு ஸ்தானங்கள்:
6 8 12-ம் வீடுகள் தீய வீடுகள் என சொல்லப் படுகின்றன. கடன், நோய், இழப்பு, துக்கம் போன்றவற்றைச் சொல்வது துர் ஸ்தானங்கள் என்றும் சொல்வதுண்டு.
திரிகோண ராசிகள்   :    1, 5 , 9 –ம் வீடுகள்
கேந்திர ராசிகள்      :    1, 4 , 7 . 10 –ம் வீடுகள்
உப ஜெய ராசிகள்    :    3, 6 , 11 –ம் வீடுகள்
துர்ஸ்தான வீடுகள்   :     6, 8 , 12 –ம் வீடுகள்
அறம்- தர்ம வீடுகள்      :       1, 5 , 9
பொருள்-அர்த்த வீடுகள்   :       2, 6, 10
இன்பம்-காம வீடுகள்      :       3, 7, 11
வீடு-மோட்ச வீடுகள்   :       4, 8, 12
1 முதல் 6 வரை உள்ள வீடுகளை கண்ணுக்கத் தெரியாத பகுதி என்றும் 7 முதல் 12 வரை உள்ள வீடுகள் கண்ணிற்குத் தெரியும் பகுதி எனவும் சொல்வர். இதே போல் 10-ம் வீடு முதல் 3ம் வீடு வரை உள்ள பகுதியை கிழக்குப்பகுதி எனவும், 4 முதல் 9 வரை உள்ளதை மேற்குப் பகுதி எனவும் சொல்வர்.

ஜாதகத்தில் வீடுகள்

ஜாதகத்தில் முக்கியமானவை ராசி சக்கரம், நவாம்ச சக்கரம் மற்றும் பாவ சக்கரம் ஆகியனவாகும். இதில் ராசி சக்கரம் அடிபடையானது. இதை வைத்தே பெரும்பாலான பலன்கள் கணிக்கப்படுகின்றன. இதில் லக்கினம் முதல் வீடாக கருதப்படுகிறது. நவாம்சம் என்பது ராசியை ஒன்பதாக பிரிப்பதாகும். பாவ சக்கரம் என்பது துல்லியமான கணக்கீடாகும். இதில் ஒரு வீடு என்பது ஒரு முழு ராசி அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட ராசிகளில் ஒரு பாவம் வியாபித்திருக்கலாம். ராசியில் ஒரு வீட்டில் இருக்கும் கிரகம் பாவத்தில் வேறு வீட்டில் இருக்கலாம். பாவக சக்கரம் கணிக்க பாவ ஸ்புடங்கள் கணிக்க வேண்டும். இதற்கு லக்கினம் எனப்படும் Ascendant, அதற்கு நேர் எதிரே இருக்கும் Descendant பத்தாம் வீடு எனப்படும் Midheaven அதற்கு நேர் எதிரே இருக்கும் நான்காம் வீடு எனப்படும் Nadir இவற்றை கணிக்க வேண்டும். இதற்கு நிறைந்த கணித அறிவும் table of bhavas மற்றும் ephemeris தேவைப்படும். ஆனால் இதெல்லாம் கணிப்பொறி காலத்திற்கு முன். இப்பொழுது கணிணியில் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடம் இவற்றை உள்ளீடு செய்தால் சில செய்து வினாடிகளில் அனைத்து கணக்கீடுகளையும் செய்து கணினி நமக்கு தருகிறது. பல மணி நேரங்களில் செய்ய வேண்டிய கணக்குகள் சில வினாடிகளில் முடிக்கப்படுகிறது! எனவே ராசி சக்கரம் என்பது தோராயமான பாவ சக்கரமாகும்.

ஒவ்வொரு பாவத்திற்கும் காரகங்கள்

லக்கின பாவம்

உடல்வாகு, நிறம், கவர்ந்திடும் அழகு, செல்வம், உடலில் உள்ள இரத்தத்தின் தன்மை, அழகிய உள் பாகங்களும் தலைப்பகுதியும், புகழ், வாழ்க்கையில் அனுபவிக்கும் அனைத்து சுகங்களையும், சுப நிகழ்ச்சிகளையும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் அனுபவிக்கப் பெறும் ஆயுளையும் குறிக்கும் பாவமாகும். அடித்தளம் பலமாக அமைந்தால்தான் கட்டிடமும் உறுதியாக ஆண்டாண்டு காலத்திற்கு நிலைத்திருக்க இயலும். அதே போன்று லக்னமும் பலமாக அமைந்தால்தான் அனைத்தும் அனுபவிக்கும் யோகத்தை நீண்ட ஆயுளைத் தரும். வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க செல்வம் இருந்தால் மட்டும் போதாது. அதை அனுபவிக்க உடல் நலமும் தேவைதான். உடல் நலத்தோடு அனுபவிக்க ஆயுளையும் பெற வேண்டும். இதற்கு இலக்கின பாவமும் லக்கினாதிபதியும் பலமாக அமைய வேண்டும்.

இரண்டாம் பாவம்

தனம், குடும்பம், நேத்திரம், கல்வி, வாக்கு, பேசும் திறன், கலைகளை கற்கும் ஆர்வம் (சாஸ்திரம்), மனம், நடை, நவரத்தினங்கள், நிலையான கொள்கை, உணவு, முகம், நாக்கு இவைகளை குறிக்கும். உண்மையே பேசுதல், பொய்யும் சொல்லுதல், முன்கோபம், கண்களில் வலது கண், வஞ்சக நெஞ்சமா, பெருந்தகையாளரா என்பதை தெரிவிக்கும் பாவம். சுவை அறிந்து உண்பதையும் குறிக்கும். முக்கியமாக தனஸ்தானம் எனப்படும்.

மூன்றாம் பாவம்

எதிரியை வெற்றி கொள்ளும் திறமை, வேலையாட்கள், இசை, இசையில் ஆர்வம், அதில் தொழில் அமையும் நிலை, வீரியம், அதாவது ஆண்மை சக்தி, தைரியம், எதையும் துணிவுடன் பயமின்றி செயலாற்றுதல், போகம், உடல் உறவில் தணியாத தாகம், இளைய உடன்பிறப்புகள், காதில் ஏற்படும் நோய், காது கேளாத நிலை, ஆபரணங்கள் அணியும் யோகம், தங்கம், வெள்ளி, வயிர ஆபரணங்களை பெறும் யோகம், உணவு அருந்தும் பாத்திரங்கள், மற்றவர்களிடம் பணியாற்றும் நிலை, அதனால் பெறும் நன்மைகள், இவைகளை குறிக்கும். குறிப்பாக சகோதர ஸ்தானம் எனப்படும்.

நான்காம் பாவம்

உயர் கல்வி, வாகனம் வீட்டில் நடைபெறுகின்ற சுப நிகழ்ச்சிகள், வசிக்கும் வீடு, வியாபாரம், தாய் நலம், தாயின் உறவு, உறவினர்களின் நிலை, அவர்களுடன் ஏற்படும் உறவு, புகழ்பெறும் நிலை, புதையல் கிடைக்கும் யோகம், தாயின் ஒழுக்கம், பால் பால் பொருட்கள், பசு பண்ணை, திருதல தரிசனம், சிறுதூர பிரயாணம், அதனால் ஏற்படும் நன்மை, ஆலோசனை பெரும் வாய்ப்பு, கனவுகள், மருந்துகள், அதிகாரம் செய்யும் தகுதி, இவைகளையும் பொதுவாக வீட்டை பற்றி சுகத்தை பற்றி தெரிவிக்கும் பாவமாகும்.
  • 4 ஆம் பாவத்தையும் புதனின் பலத்தையும் அறிந்து ஒருவரின் கல்வி அதாவது உயர் கல்வி பெறுவதை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சுக்கிரனின் பலத்தையும் அறிந்து கார், பைக் போன்ற வாகனம், ஆபரணம் பெறும் நிலையை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் செவ்வாயையும் அறிந்து அவர்களின் பலத்தை பொறுத்து அசையாத சொத்துகள் அதாவது வீடு, நிலம், தோட்டம், பண்ணை வீடுகள் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் சந்திரனின் பலத்தையும் அறிந்து தாயின் நிலை, ஆயுள், பாசம் இவற்றை அறியலாம்.
  • 4 ஆம் பாவத்தையும் குருவின் பலத்தையும் அறிந்து வாழ்க்கையில் பெறும் அனைத்து வசதிகளையும், சுகம் பெறும் நிலையையும் புகழ் பெறும் தகுதியையும் அறியலாம்.

ஐந்தாம் பாவம்

மாமன்மார்களின் உறவு, தந்தை வழி உறவுகள், குழந்தை செல்வம் பூர்வ புண்ணியம், சென்ற பிறவியில் பெற்ற நன்மை தீமைகளை அதன் அளவை தெரிவிக்கும் பாவம், தமிழ் மொழியில் தேர்ச்சி, மந்திரங்களை அறியும் திறமை, உயர் கல்வி பெரும் தகுதி, அறிவாற்றல், அனுபவ அறிவு, சொற்பொழிவு செய்யும் திறமை, கதாகாலட்சேபம் செய்யும் திறமை, பெண்களுக்கு கர்ப்பம் தரிக்கும் தகுதி, தாத்தாவின் நிலை, மந்திர உபதேசம், இவற்றை குறிக்கும். குறிப்பாக புத்திர பாவம், பூர்வ புண்ணிய பாவம் எனப்படும்.
  • குருவையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து குழந்தை செல்வத்தை அறியலாம்.
  • புதனையும் 5 ஆம் பாவத்தையும் அறிந்து கல்வி பெறும் தகுதி, ஆன்மீக சிந்தனை மந்திரங்கள் கற்பது, உபதேசிப்பது, பிரார்த்தனை செய்வது இவைகளை அறியலாம். சொற்பொலிவாற்றும் தகுதி, கதாகலாட்சேபம் செய்யும் வாய்ப்பு இவைகளை அறியலாம்.

ஆறாம் பாவம்

ஒருவருக்கு ஏற்படும் வியாதி - அதனால் ஏற்படும் பாதிப்பு, பகைவர்களால் ஏற்படும் துன்பம், ஆயுதங்களால் ஏற்படும் ஆபத்து, காயங்கள், தாயின் உறவினர்களுடன் ஏற்படும் வழக்குகள், சண்டையிடுதல் யுத்தம் செய்தல், வீண் வம்பிற்கு செல்லுதல், திருடர்களால் ஆபத்து, பொருட்கள் களவாடப்படுதல், தண்ணீரால் ஆபத்து, பெண்களால் உண்டாகும் வீண் வம்புகள், அதனால் அடையும் துன்பம், பாம்புகளால்-விஷத்தால் ஆபத்து, சந்தேகம், சோம்பேறித்தனம், ஒருவரை தூசித்தல், பாவமான காரியங்களை செய்தல், நோய்,. சிறைபடுதல், உயர் பதவி பெறுதல், கால்நடைகளை பற்றி அறிதல் இவை ஆறாம் பாவம் குறிக்கும் காரகங்களாகும்.

ஏழாம் பாவம்

திருமணத்தைக் குறிக்கும் பாவம். ஆண்களுக்கு மனைவியை பற்றியும், பெண்களுக்கு கணவரை பற்றியும் அறிவிக்கும் பாவம். திருமணம் நடைபெறும் காலம், மனைவி, கணவன், ஆயுள் சுற்றுப்புற சூழ்நிலை, கூட்டு வியாபாரம், திருமணத்தால் ஏற்படும் சுகம், மகிழ்ச்சி, சிற்றின்பம், துணி வியாபாரம், அரசாங்கத்தில் ஏற்படும் கவுரவம், பட்டம், பதவி, சன்மானம், தறி நெய்தல், பவர் லூம், சிறிய பஞ்சு மில், எந்த பொருளையும் வாங்கி விற்கும் கமிஷன் தொழில், தரகர் தொழில் இவற்றை குறிக்கும். களத்திர ஸ்தானம் எனப்படும்.

எட்டாம் பாவம்

ஒருவரது ஆயுளை தெரிவிக்கும் பாவம். யுத்தத்தில் ஆயுதங்களால் காயம் ஏற்படுதல், உயர்வான இடத்தில இருந்து விழுவதால் ஏற்படும் ஆபத்து, மலை மீள் இருந்து விழுதல், நீங்காத வியாதிகளால் ஏற்படும் துன்பம், இடையூறுகள், அவைகளால் ஏற்படும் மனசஞ்சலம், நீங்காத பகையால் ஏற்படும் ஆபத்துகள், வீண் அலைச்சல், செய்ய தகாத காரியங்களை செய்தல், அதனால் ஏற்படும் துயரம், கருத்து மோதல்கள், அஞ்ஞான வாசம், அதிகமாக ஏற்படும் வீண் செலவுகள், மரணம் இவைகளை தெரிவிக்கும் பாவம். இது 10 ஆம் பாவத்திற்கு (ஜீவன பாவம்) 11 ஆம் பாவமாகும் (லாப ஸ்தானம்). இதில் உள்ள கிரகங்களில் தசா புக்தி அந்தரங்களில் தொழில் முறையில் யோகத்தை, லாபத்தை தரும்.

ஒன்பதாம் பாவம்

இந்த பாவம் பாக்கிய ஸ்தானம் எனப்படும். சென்ற பிறவியில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கும் பாவம். பாவாதி பாவம் என்ற விதிப்படி 5 ஆம் பாவத்திற்கு 5 ஆம் பாவமே 9 ஆம் பாவம். தான தர்மம் செய்யும் குணம், திருகோவில்களை கட்டும் பணியில் ஈடுபடுதல், அவைகளை புணருத்தாரணம் செய்தல், கும்பாபிஷேகம் செய்த போன்ற திருப்பணிகளில் ஈடுபடும் யோகம், ஆன்மீக உணர்வு, அயல்நாடு செல்லும் வாய்ப்பு, அங்கு பெறும் பணி,தொழில்கள், அவைகளால் பெறும் லாப-நஷ்டம், நன்றியுணர்வு இவைகளை தெரிவிக்கும் பாவம். தர்மம் என்பது கேட்டு கொடுப்பது தானம் என்பது கேட்காமல் கொடுப்பது, அறம் என்பதை 32 வகைகளில் செய்யலாம் என கூறியுள்ளார்கள்.
தானத்திலே சிறந்தது அன்னதானமும், கல்வி தானமுமாகும். பசித்தோர்க்கு உணவு கொடுப்பது சிறந்த தானமாகும். ஏழை குழந்தைகளுக்கு கல்வி பெற உதவி செய்வதும் சிறந்த தொண்டாகும். வசதி படைத்தோர் அவரவர் தகுதிக்கேற்ப தானதர்மம் செய்வதை உணர்த்தும் இடமாகும். மனித நேயமுடையவர்களா, ஜீவகருண்ய சீலரா என்பதையும் தெரிவிக்கும் இடம்.

பத்தாம் பாவம்

பணியாற்றுதல், தொழிலால் பெறும் லாபம், அதனால் பெறும் புகழ், உயர் பதவி, அரசாங்க கவுரவம், புகழ், பட்டம், பதவி, அரசியலில் ஈடுபாடு, அதில் பெறும் புகழ், அரசாளும் யோகம், தெய்வ வழிபாடு, உணவில் ஏற்படும் ஆர்வம், சுவை, சுவையான உணவு கடிக்கும் தகுதி, இரவாபுகழ் பெறும் தகுதி இவைகளை உணர்த்தும் பாவம். தொழில் ஸ்தானம், கர்ம ஸ்தானம், ஜீவன ஸ்தானம் எனப்படும்.

பதினோராம் பாவம்

மூத்த உடன்பிறப்புக்களை பற்றியும், சேவை செய்யும் நிலை, இளைய மனைவி (இரண்டாம் திருமணத்தை குறிக்கும்), செய் தொழில், தொழிலி கிடைக்கும் லாபம், பயிர் தொழில், குதிரை, யானை இவைகளை வளர்த்தல், பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, அறிவாற்றல், மன அமைதி பெறுதல், நண்பர்கள் அமையும் நிலை,அவர்களால் பெறும் நன்மைகள், மாப்பிள்ளை மருமகள் இவர்களால் பெறும் நன்மைகள், லாபங்கள், உதவிகள், வாகன யோகம் இவற்றை குறிக்கும் பாவமாகும். துன்பங்கள், துயர்கள் தீர்ந்திடும் நிலை ஆடை இவைகளையும் குறிக்கும்.

பன்னிரெண்டாம் பாவம்

அந்நிய நாட்டில் அமையும் தொழில், உத்தியோகம், செலவினங்கள், செலவு செய்வதால் ஏற்படும் சுகம், சயன சுகம், விவசாயம், தியாக மனப்பான்மை, யாகம் செய்தல், மறுமையில் கிடைக்கும் பேறு, மனைவி அல்லது கணவர் அமையும் இடம், அனவசிய செலவுகள், சிறைபடுதல், நிம்மதியான தூக்கம், தூக்கமின்மை, இல்லற சுகம், பெண்களுடன் ஏற்படும் தாம்பத்திய சுகம் இவைகளை குறிக்கும். மறுபிறவி மரணத்திற்கு பிந்தைய நிலை இவற்றையும் குறிக்கும். குறிப்பாக விரய பாவம் எனப்படும். ஒவ்வொரு பாவத்திற்கும் அதற்கு 12 ஆம் பாவமே அழிவு பாவமாகும்

நலமுடன் வாழ எளிய வழிகள்

நலமுடன் வாழ எளிய வழிகள்
1. தினசரி ஒரு வெங்காயத்தை பச்சையாக உண்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். இருமல், சளி நீங்கும்.
2. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இந்தக்காய் ஆஸ்துமா, ஜீரம் முதலியவற்றை நீக்கும்.
3. கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு முறை கேழ்வரகில் செய்த உணவுப்பொருளை சாப்பிட வேண்டும். இதில் இரும்புச்சத்து, கால்சியம் உள்ளது.
4. வேப்பம்பூவை ரசம் வைத்துச் சாப்பிட்டால் உடம்பில் உள்ள கிருமிகள் அழியும். பித்தம் குறையும்.
5. தினமும் முருங்கைக் கீரையைச் சாப்பிட்டால் நீரழிவு நோய் கட்டுப்படும். கண் பார்வை தெளிவு பெறும்.
6. அதிக இருமல் ஏற்படும் போது ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் இருமல் குறையும்.
7. சாதாரண வாய்வுப் பிடிப்பிற்கு சுக்கையும், பனை வெல்லத்தையும் கலந்து சாப்பிட்டால் போதும்.
8. மணத்தக்காளிக் கீரையை பருப்புடன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆசனக்கடுப்பு, மூல நோய் குணமாகும்.
9. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்துக் குடித்தால் அஜீரணம் சரியாகிவிடும்.
10. முள்ளங்கி கீரையில் வைட்டமின் சத்து உள்ளது. இக்கீரை தொற்று நோய்களை விரட்டி அடிக்கும்.
11. உடல் எடை குறைந்தவர்கள் வாழைப்பழம் தினமும்

Thursday, 21 January 2016


கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.

கோபத்தை அடக்கச் சுலபமான வழிகள்..!.
-----------------------------------------------------------
1. பொருட்படுத்தாதீர்கள்.
------------------------------------
உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள்.
2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்.
----------------------------------------------------------------
ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கை தான். எனவே, யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்.
---------------------------------------------------------
தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை.
4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்.
--------------------------------------------------------------------------
பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள்.

Thursday, 14 January 2016

குறட்டையை தடுக்க எளிய வழிகள்

குறட்டையை தடுக்க எளிய வழிகள்

f
குறட்டை என்பது ஒரு கோளாறு. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது.
குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகள் உள்ளன. அவற்றை பின்பற்றி பலன் பெறுங்கள்.
* படுக்கும் போது படுப்பதற்கு சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம்.
* பக்கவாட்டில் இரவு முழுவதும் படுப்பது மிகவும் கஷ்டம் தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும்.
* ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.
* சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.
* இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.
– சளி, மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளால் வரும் குறட்டையை மட்டுமே இந்த முறைகளை பின்பற்றி தற்காலிகமாக குறைக்க முடியும். அப்படியும் சரியாகவில்லை என்றால் மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது.

Tuesday, 12 January 2016

செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு பாதிக்கும்

செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு பாதிக்கும்

பொதுவாக நமது ஜனனகாலத்தை வைத்துத்தான் ஜாதகக் கட்டத்தில் கிரகங்களின் இருப்பிடங்களைக் குறிக்கிறார்கள். சென்ற பிறவிகளில் நாம் செய்த பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலேயே, இந்தப் பிறவியில் நமது ஜாதகக் கட்டங்கள் அமைகின்றன. 

அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சென்ற பிறவியில் செய்த தவறுகள், பாதகங்கள், பாவங்களைப் பொறுத்தே கிரக அமைப்புகள் ஜாதகத்தில் இடம் பெறும். பாவ, புண்ணியங்கள் தான், ஜாதகத்தில் தோஷங்களாகவும், தீயபலன்களாகவும், நற்பலன்களாகவும் பதிவாகும். ஆக பூர்வ ஜென்ம பாவ, புண்ணிய அடிப்படையில் தான் நமக்குப் பிரச்சனைகளும், பாதிப்புகளும் ஏற்படுகிறது. 

நமக்கு ஜாதக ரீதியாக உள்ள பிரச்சனைகள், பாதிப்புகளைத்தான் தோஷம் என்று சொல்கிறோம். பிரச்சனை என்ற ஒன்று இருந்தால், தீர்வு என்று ஒன்று இருக்க வேண்டுமே. அந்தத் தீர்வுகளைத் தான் பரிகாரம் என்று சொல்கிறோம். ஜாதகத்தில் ஏற்படக்கூடிய தோஷங்கள் என்ன? 

அவற்றிற்கு உரிய பரிகாரங்கள் என்ன என்பதை இந்தத் தொடரில் பார்ப்போம். இப்போது செவ்வாய் தோஷத்தைப் பற்றி பார்ப்போம். ஒருவருக்கு திருமணப் பொருத்தத்திற்காக, ஜாதகம் பார்க்கும் பொழுது, செவ்வாய் தோஷம் இருக்கிறதா என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 

ஏனென்றால் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க செவ்வாய் மிக முக்கியமான காரணமாகிறது. ஜனன காலத்தை வைத்து, ஜாதகம் கணிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இதில் லக்னம் என்பது விதியைக் குறிக்கிறது. மதியைக் குறிப்பது சந்திரன். 

மதிக்கும் அதாவது சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் மற்றும் குறிப்பிட்ட ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாய்க்கும் உள்ள தொடர்பை வைத்துத்தான், செவ்வாய் தோஷம் எந்த அளவிற்கு பாதிக்கும் என்று சொல்லலாம். லக்னம், ராசியில் சந்திரன், சுக்கிரன் இருக்குமிடத்திலிருந்து 2-ஆம் இடம், 4-ஆம் இடம், 7-ஆம் இடம், 8-ஆம் இடம் என செவ்வாய் எந்த வீட்டில் இருந்தாலும் செவ்வாய் தோஷம் ஏற்படும். 

இன்னும் சுருக்கமாகச் சொன்னால் லக்கினத்திற்கு 2,4,7,8,12-இல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷ ஜாதகமாகும். இதில் ஒரு ஆண் ஜாதகருக்கு தோஷம் இருந்து, பெண் ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இல்லாமல் திருமணம் செய்தால் ஆணிற்கு அல்லது கணவனுக்கு இந்தத் திருமண பந்தத்தில் எவ்வித நலனும் இன்றி, முழுக்க கெடுபலனே நிகழும். 

அதே போல பெண்ணிற்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்து, ஆணிற்கு தோஷம் இல்லாமல் திருமணம் செய்தால், பெண் அல்லது மனைவிக்கு திருமண உறவால் எவ்விதச் சிறப்பும் இல்லாமல், சீரழிவே ஏற்படும். இதில் ஓர் அறிவியல் உண்மையும் இருக்கிறது. 

செவ்வாய் - அங்காரகன் வெப்பமயமானவர். செவ்வாயை உஷ்ணக்கிரகம் என்றும் குறிப்பிடுவர். செவ்வாய் தோஷம் உள்ளவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்து, அவர்களின் இரத்தத்தையும் பரிசோதனை செய்து பார்த்ததில், ஏறத்தாழ 90-க்கும் அதிகமான சதவிகிதத்தினருக்கு `ஆர், ஹெச் நெகட்டிவ்'' வாக ரத்தமே இருந்தது தெரியவந்துள்ளது. 

இது அரிய வகை ரத்தம். இந்த வகை ரத்தம் அதே வகை ரத்தத்தோடு சேரும் போது தான் பாதிப்பு இருக்காது. மாறாக வேறு வகை ரத்தத்தோடு, திருமண பந்தம் இருந்தால், உடல் அளவில் ஏற்படும் பாதிப்பு மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

ஒவ்வாத ரத்தக் கலப்பு, தீராத பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும் என்பதினால்தான், திருமணப் பொருத்தம் பார்க்கும் பொழுது, செவ்வாய்க்கு முதல் மரியாதை கொடுக்கிறார்கள். இந்த அடிப்படையை புரிந்து கொண்டால், செவ்வாய் தோஷத்திற்கான விளக்கமும் எளிதாகப் புரிந்து விடும். மைனசும், மைனசும் பிளஸ் ஆவதைப் போல , செவ்வாய் தோஷ ஜாதகத்தோடு, செவ்வாய் தோஷ ஜாதகத்தை இணைத்தால், திருமண பந்தம் சிறக்கும் என நம் முன்னோர்கள் அறிவியல் அடிப்படையிலேயே ஜாதகத்தைக் கணித்திருக்கிறார்கள். 

செவ்வாய் தோஷத்தைப் போலவே, சுக்கிர, ராகு, சனி தோஷங்களையும், ஜாதக ரீதியில் ஒப்பிட்டுப் பார்த்தே, திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும். மேலெழுந்த வாரியாக 6 பொருத்தம், 8 பொருத்தம் என்று பார்த்து திருமணம் செய்துவிடக் கூடாது. 2,4,7,8,12-இல் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று பார்த்தோம். 

இதில் ஏகப்பட்ட விதிவிலக்குகளும் இருக்கின்றன. செவ்வாய் அமைவிடத்தை வைத்து மட்டுமே தோஷம் என்று கூறிவிட முடியாது. செவ்வாய் - மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் ஆகிய வீடுகளில் இருந்து, அவைகள் 4,7-ம் இடங்களால் சுபர் ஆனால் தோஷம் ஏற்படாது. காரணம் சம்பந்தப்பட்ட வீடுகளில், செவ்வாய் நீச்சம் பெற்றோ, உச்சம் பெற்றோ இருக்கும். 

செவ்வாய் சூரியனுடன் இருந்தாலும், சூரியனைப் பார்த்தாலும் தோஷம் கிடையாது. செவ்வாயோடு, சந்திரன் மட்டும் இருந்தாலும் தோஷமில்லை. குரு, புதனோடு சேர்ந்தாலும் தோஷம் கிடையாது. சனி, ராகு, கேது, இவர்களுடன் சேர்ந்து இருந்தாலும், பார்க்கப்பட்டாலும் செவ்வாய் தோஷம் இல்லை. 

சிம்மம் அல்லது குடும்பத்தில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் கிடையாது. இரண்டாமிடம் மிதுனம் அல்லது கன்னியாகி, அதில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை. நான்காமிடம் மேஷம், விருச்சிகமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷம் கிடையாது. 

ஏழாமிடத்தில் கடகம், மகரமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும், எட்டமிடத்தில் தனுசு, மீனமாகி, அதில் செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை. செவ்வாய் தோஷத்தைப்பற்றி ஒரு தப்பான கருத்து நிலவுகிறது. செவ்வாய் தோஷத்தால், பெற்றோருக்கு ஆகாது, மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்றெல்லாம் நம்புகிறார்கள். 

ஜோதிட ரீதியாக அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. செவ்வாய் 1,7,8 ஆகிய இடங்களில் இருக்கும் போது, அது கடுமையான தோஷமாகக் கருதப்படுகிறது. எனவே ஜாதகரீதியாக பொருத்தம் பார்க்கும் போது, அதே போல கடுமையான தோஷமுள்ள ஜாதகத்தை இணைத்தால் பாதிப்பில்லை. செவ்வாய் - 2,12-ஆம் இடங்களில் கடுமை குறைந்து காணப்படுவதால், குறைவான தோஷமே இருக்கும். 

இவற்றோடு தொடர்புடைய ஜாதகமாக இணைத்துப் பொருத்தம் பார்த்தால் நல்லது. 4-இல் செவ்வாய் இருப்பவர்களுக்கு 4,2,12-இல் செவ்வாய் உள்ளவர்களாகப் பார்த்து திருமண பந்தம் ஏற்படுத்தினால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?

தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?


தரித்திரத்தை தவிர்ப்பது எப்படி?
ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாதுகொடுப்பவரும்,வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும். 2.வாசல்படிஉரல்ஆட்டுக்கல்அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. 3. இரவு நேரங்களில் பால்மோர்தண்ணீர்அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்க கூடாது. 4. வெற்றிலைவாழை இலை இவைகளை வாடவிடக்கூடாதுவெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது. 5. சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. 6. குத்து விளக்கை தானாக அணைய விடக்கூடாதுஊதியும் அணைக்க்கூடாதுபுஷ்பத்தினாலும் அணைக்ககூடாது. 7. வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாதுஇழவு என்றும் கூறக்கூடாது. 8. அதிகமாகக்கிழிந்த துணிகளை உடுத்த கூடாது 9. துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது. 10. உப்பைத்தரையில் சிந்தக் கூடாதுஅரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது. 1 1

திருமணம் அமைவது இல்லை.

திருமணம் அமைவது இல்லை.

ஒரு ஜாதகத்தில் லக்னம்  என்று ஓன்று இருக்கும் இல்லையா.... அதை ஓன்று என்று வைத்து கொண்டால் அதில் இருந்து கேந்திரம் என்று சொல்ல கூடிய 4 , 7 , 10 ம் இடங்களிலோ,  அல்லது திரிகோணம் என்று சொல்ல கூடிய 5 , 9 ம் இடங்களிலோ 5 க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால், அவர்களுக்கு திருமணம் அமைவது இல்லை. 
சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3 , 7 , 10 ம் இடத்தை பார்பார்.  அந்த வகையில்  லக்னாதிபதியாக வருகிற கிரகத்தையும், சந்திரனையும் சனி பகவான் பார்த்தால்,  அந்த அமைப்பை உடைய ஜாதகருக்கு திருமணம் நடப்பதில்லை. 

ஏன்?

பொதுவாக ஜாதகத்தில் சனி சந்திரன் தொடர்பு ஏற்பட்டாலே புனர்பூ தோசம் என்று பெயர்.   அது வாலிபத்தில் திருமணத்தை நடத்த விடாது.  நெருங்கி வந்த மாதிரி ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி விட்டு விலகி போய்விடும். 

அடுத்து...

களத்திர பாவம் என்று சொல்லக்கூடிய 7 ம் இடத்தில் சந்திரன்,  சுக்கிரன், சனி, செவ்வாய் இணைந்து இருந்தால் மனபந்தால் ஏறும் அமைப்புக்கு மறுப்பு வந்துவிடும்.

ஒரு ஜாதகத்தில் 5 ம் அதிபதியாக வரக்கூடிய கிரகம்,  ராகு அல்லது கேதுவுடன்  சேர்ந்தால் திருமணம் நடப்பதில்லை,  அல்லது குழந்தைகள் பிறப்பது இல்லை. 

நான்கு கிரகங்கள் பத்தாம் பாவத்தில் இருந்தாலும்,  நாற்பது  வயதுக்கு முன் திருமணம் நடக்காது.   இப்படி பல கிரக நிலைகள் இருக்கிறது.  ஜோதிடர் சொல்லி முடித்து விட்டு சாம்பசிவத்தை ஏறிட்டு பார்த்தார். 

பிரமை பிடித்த மாதிரி இருந்த சாம்பசிவத்தை ஜோதிடரின் குரல் தான் இயல்பு  நிலைக்கு திருப்பியது. 

பிள்ளைவாள் ... இந்த பொண்ணோட ஜாதகத்திலே கிரக பாதிப்புகள் இருக்கிறது என்பது உண்மைதான். அதுக்காக கவலை பட வேண்டாம்.  காயம் சின்னதா இருக்கும் போதே மருந்து போடணும் .  நம்மில் பலர்.. காயம் புரை ஓடிய பிறகுதான் அதை பற்றியே கவலை படுறது.

போகட்டும்... நான் பரிகாரம் சொல்றேன்.  செய்யுங்கோ.  எல்லாம் நல்லபடியா நடக்கும்.

என்ன ஜோசியரே செய்யணும்?

பார்வதி சுயம்வர ஹோமம் செய்யணும்.  செய்தால் கல்யாணம் நடக்கும்.  உங்களுக்கு தெரிந்த ஐயரை கேட்டு,  ரொம்ப சுத்தமா, நியதிமாறாமல் ஹோமம் செய்தால் திருமணம் நடக்கும்.  செய்யுங்கோ. 

சந்திராஷ்டமம் என்றால் என்ன; அது என்ன செய்யும்?

சந்திராஷ்டமம் என்றால் என்ன; அது என்ன செய்யும்?

சந்திராஷ்டமம் என்றால் என்ன; அது என்ன செய்யும்?


ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங் களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும்  தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம்  காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

சந்திரனின் முக்கியத்துவம்

ஒரு ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையை பெறுவது ராசியா கும். ராசி என்பது நாம் பிறக்கும்போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட் டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் நாம் ராசி என்கிறோம். அதே நேரத்தில் புதன்  இருக்கும் இடத்தையோ, குரு இருக்கும் இடத்தையோ நாம் ராசி என்று சொல்வதில்லை. இதில் இருந்து சந்திரனின் முக்கி யத்துவத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.

சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் பிறந்தநாள் கொண்டாடுகிறோம். 
சந்திரன் இருக்கும் நட்சத்திரம் மூலம்தான் திருமணப் பொருத்தம் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை வைத்துத்தான் ஒருவருக்கு முதல் தசை எது என்று கணிக்கிறோம்.
சந்திரன் இருக்கும் ராசிப்படிதான் கோச்சார பலன்களைப் பார்க்கிறோம்.
சந்திரன் இருக்கும் நட்சத்திரத்தை சொல்லித்தான் கோயிலில் அர்ச்சனை, வழிபாடுகள் செய்கிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் பெற்ற சந்திரன் மூலம் நமக்கு யோகங்கள், அவயோகங்கள், தடைகள் ஏற்படுகின்றன. அந்த  வகையான இடையூறுகளில் ஒவ்வொரு மாதமும் சந்திரனால் ஏற்படும் தோஷங்களில் ‘சந்திராஷ்டமம்’ ஒன்று.

சந்திராஷ்டமம்

நீங்கள் பிறந்த ராசிக்கு எட்டாமிடமான அஷ்டமஸ்தானத்தில் சந்திரன் வருமானால், அதையே  சந்திராஷ்டமம் என்கிறோம்.  சந்திரன்+அஷ்டமம்= சந்திராஷ்டமம். சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டேகால் நாட்களைத்தான்  ‘சந்திராஷ்டம’ காலம் என்கிறோம். அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ் சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம் ஆகும். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள்,  இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும். மேலும் சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக  தனம், குடும்பம், வாக்குஸ்தானமான இரண்டாம் இடத்தை பார்ப்பதால் அந்த ஸ்தான அமைப்புகளும் பாதிப்படைகின்றன. 

ஆகையால் இந்த சந்திராஷ்டம தினத்தன்று முக்கிய சுபகாரியங்களை செய்ய மாட்டார்கள். மணமகன், மணமகள் ஆகிய  இருவருக்கும் சந்திராஷ்டம் இல்லாத நாளில்தான் திருமண முகூர்த்தம் வைப்பார்கள். பால் காய்ச்சுதல், கிரகப் பிரவேசம்,  வளைகாப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்கும் சந்திராஷ்டமத்தை தவிர்த்து விடுவார்கள். புதிய முயற்சிகள் செய்ய மாட்டார்கள்,  புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுவார்கள். முக்கிய பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட மாட்டார்கள். குடும்ப விஷயங்களை யும் பேச மாட்டார்கள். ஏனென்றால் சந்திராஷ்டம தினத்தன்று சந்திரனால் நம் மனதில் சில மாற்றங்கள் உண்டாகின்றன.  

எதிர்மறையான எண்ணங்கள் தோன்றுகின்றன ஏனென்றால் சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவன். ஆகையால் நம்  எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சந்திரன் ஜெனன ஜாதகத்தில் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய இடங்களில் மறைந்து இருந்தாலும் உச்சம், ஆட்சி, நீச்சம்  போன்ற அமைப்புகளில் இருந்தாலும் சந்திராஷ்டமத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை என சில ஜோதிட நூல்களில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரன் இருக்கும் இடம் சந்திரன் தினக்கோள் ஆகும். 

வேகமாக சுற்றும் இந்த கிரகம் முப்பது நாட்களில் (ஒரு மாதத்தில்) 12 ராசிகளை கடந்துவிடும். இப்படி கடக்கும்போது தினசரி சந்திரன் இருக்கும் இடத்தை பொறுத்து நம் குணாதிசயங்கள் வேறுபடுகிறது, அதே  நேரத்தில் லாப-நஷ்டங்கள்,  நிறை-குறைகள் ஏற்படுகின்றன. நம் ராசிக்கு சந்திரன் எங்கெங்கு வரும்போது என்னென்ன  பலன்கள் ஏற்படும்?
சந்திரன் நாம் பிறந்த ராசியில் இருக்கும்போது: மனம் அலை பாயும், சிந்தனை அதிகரிக்கும். ஞாபக மறதி உண்டாகலாம். இரண்டாம் இடத்தில் இருக்கும்போது: பணவரவுக்கு வாய்ப்புண்டு. பேச்சில் நளினமிருக்கும். கவிஞர்களுக்கு கற்பனை வ ளம் மிகும்.

மூன்றாம் இடத்தில் இருக்கும்போது: சமயோசிதமாக செயல்படுதல், சகோதர ஆதரவு, அவசிய செலவுகள். நான்காம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், மனமகிழ்ச்சி, உற்சாகம், தாய்வழி ஆதரவு.

ஐந்தாம் இடத்தில் இருக்கும்போது: ஆன்மிக பயணங்கள், தெய்வ பக்தி, நல்ல எண்ணங்கள், தெளிந்த மனம். தாய் மாமன்  ஆதரவு.

ஆறாம் இடத்தில் இருக்கும்போது: கோபதாபங்கள், எரிச்சல், டென்ஷன். வீண் விரயங்கள். மறதி, நஷ்டங்கள்.

ஏழாம் இடத்தில் இருக்கும்போது: காதல் நளினங்கள், பயணங்கள், சுற்றுலாக்கள், குதூகலம். பெண்களால் லாபம், மகிழ்ச்சி.

எட்டாம் இடத்தில் இருக்கும்போது: இதைத்தான் சந்திராஷ்டமம் என்று சொல்கிறோம். இந்நாளில் மௌனம் காத்தல் நல்லது. தியானம் மேற்கொள்ளலாம். கோயிலுக்குச் சென்று வரலாம்.

ஒன்பதாம் இடத்தில் இருக்கும்போது: காரிய வெற்றி, சுபசெய்தி, ஆலய தரிசனம்.

பத்தாம் இடத்தில் இருக்கும்போது: பயணங்கள், நிறை-குறைகள், பண வரவு, அலைச்சல், உடல் உபாதைகள்.

பதினொன்றாம் இடத்தில் இருக்கும்போது: தொட்டது துலங்கும், பொருள் சேர்க்கை, மூத்த சகோதரரால் உதவி, மன  அமைதி, தரும சிந்தனை.

பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும்போது: வீண் விரயங்கள், டென்ஷன், மறதி, கைப்பொருள் இழப்பு, உடல் உபாதைகள்.

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன்

உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள்  நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும்.

பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம்

அஸ்வினி    அனுஷம்
பரணி    கேட்டை
கிருத்திகை    மூலம்
ரோகிணி    பூராடம்
மிருகசீரிஷம்    உத்திராடம்
திருவாதிரை    திருவோணம்
புனர்பூசம்    அவிட்டம்
பூசம்    சதயம்
ஆயில்யம்    பூரட்டாதி
மகம்    உத்திரட்டாதி
பூரம்    ரேவதி
உத்திரம்    அஸ்வினி
அஸ்தம்    பரணி
சித்திரை    கிருத்திகை
சுவாதி    ரோகிணி
விசாகம்    மிருகசீரிஷம்
அனுஷம்    திருவாதிரை
கேட்டை    புனர்பூசம்
மூலம்    பூசம்
பூராடம்    ஆயில்யம்
உத்திராடம்    மகம்
திருவோணம்    பூரம்
அவிட்டம்    உத்திரம்
சதயம்    அஸ்தம்
பூரட்டாதி    சித்திரை
உத்திரட்டாதி    சுவாதி
ரேவதி    விசாகம்