Monday, 10 March 2014

மக்களை மதிக்க தெரியாதவர் பிரதமர் ஆகும் தகுதி இல்லாதவர்.

கூட்டணிக் கட்சி தலைவர்களை துச்சமென மதிக்கும் ஜெயலலிதா கையிலா, மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்ற அதிகாரத்தை வாக்காளர்கள் கொடுக்கப் போகிறார்கள்?’’ திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் திமுக, அதிமுகவை அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் பலமாக உள்ளது. எங்கள் கட்சிக்கு நிரந்தர ஓட்டுவங்கி உள்ளது.’’ விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.


Monday, 3 March 2014

எங்கள் தளபதி உழைப்பின் உருவம் 

நம் கழகத்தில் சாதாரண உறுப்பினராகச் சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்புப் படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் நம் அன்புத் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள்.
.
நம் அன்புத் தளபதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியல் நான்கு முறை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார். இளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த நம் தலைவர் அவர்கள் வழங்கினார்.

நம் அன்புத் தளபதி ஸ்டாலின் அவர்கள் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. மாநகராட்சி உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்) தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.ஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் தளபதி ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011வரை பொறுப்பு வகித்துள்ளார்.