Tuesday, 25 February 2014

அதிமுக எப்போதும் புதியவர்கள், சாதாரண தொண்டர்களை ?

அதிமுக எப்போதும் புதியவர்கள், சாதாரண தொண்டர்களை எல்லாம் வேட்பாளராக அறிவிப்பதற்கு, சிலர் வரவேற்று, அதிமுகவில் மட்டும்மே இது சாத்தியம் என்று சொல்கிறார்கள்...பார்க்கப்போனால், அதிமுகவில், எவருக்கு எந்த நேரத்தில் பதவி வரும் / போகும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் கிடையாது...நேற்று பெரிய பதவில் இருந்தவர், தெருவில் வீசப்படுவதும், மூலையில் இருபவருக்கு அதிஷ்டம் அடிப்பதை போல பதவிகிடைப்பதும், தெருவில் வீசப்பட்டவரை மீண்டும் பதவியில் அமரவைப்பதும் சாதாரணம்...

இந்த போக்கினால், கட்சியில் படிப்படியாக உயர்பவர்களுக்கு/உயர்ந்தவர்களுக்கு எந்த மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை....லாட்டரி போல பதவி கிடைத்தவர்களுக்கும், அந்த பதவியின் முக்கியத்துவம் தெரிவதில்லை, புரிவதில்லை...ஏனென்றால், இந்த பதவி, எந்த ஒரு கஷ்டமும் படாமல், உயர்ந்து படிப்படியாய் மேலேவராமல் வெறும்மனே, அதிஷ்டத்தால் பெற்ற பதவி..இன்று இருக்கும், நாளை போகும் என்பதால், இருக்கும் வரை பலனடையுவும்மே முயல்கிறார்கள்...

அடுத்தமுறை வாய்ப்பு கிடைக்காது, கொடுக்கமாட்டார்கள் என்பதால், தேர்தெடுத்த தொகுதி மக்களுக்கும் பெரிய நன்மைகளை செய்வதும் கிடையாது...வாய்ப்புகள் தொடர்ச்சியாய் கிடைக்கும் என்றால்தான், தொகுதிக்கு நன்மைசெய்யவோ, திட்டங்கள் கொண்டுவரவோ முயற்சிப்பார்கள்....இல்லாவிட்டால், வெறும்மனே பதவியில் இருந்துவிட்டு சென்றுவிடுவர்...

உதாரணத்துக்கு, எங்கள் சொந்த ஊரிலும், அதிமுக & திமுக மாறி மாறி வெற்றிபெறுகிறார்கள், அதிமுகவில் ஒவ்வொரு முறையும் புதிது புதிதாய் யாராவது வருகிறார்கள்...தொகுதியில் நடைபெற்ற வளர்ச்சி பணிகள் என்று பார்த்தால், சாலைகள், பாலம், நீதிமன்ற கட்டிடங்கள், பேருந்து நிலையம், குடிநீர் திட்டங்கள், சிமென்ட் சாலைகள், அரசு மருத்துவமனை விரிவாக்கம், அரசு கல்லூரி என பல பல....இவைகள் பெரும்பாலும் திமுக MLAக்களால் அதிகஅளவில் செய்யப்பட்டுள்ளது...

திமுக மாவட்ட பொறுப்பில் உள்ளவர்களால், நேரடியாக கலைஞரிடம்மோ, ஸ்டாலினிடம்மோ நேரடியாக பேசி, தங்கள் பகுதிக்கு தேவையானவற்றை பெற்றுக்கொள்ள உரிமை இருக்கிறது. அப்படி எத்தனையோ திட்டங்களை தமிழகம் முழுதும் சொல்லமுடியும்....ஆனால், எந்த ஒரு அதிமுக மாசெவோ, அமைச்சரோ, ஜெயாவிடம் நேரிலோ, போன் மூலமாகவோ இப்படி பேச முடியும்மா???

மொத்த வேட்ப்பாளர்களில் 25% புதியவர்களுக்கு வாய்ப்பு தரலாம், ஆனால் அவர்கள், கட்சி அளவில் படிப்படியாக ஓரளவிற்கு வளர்ந்திருக்கவேண்டும், சும்மா மூலையில் உட்கார்ந்துகொண்டு மிக்ஸ்சர் சாப்பிட்டுக்கொண்டு இருப்பவருக்கு திடீர் என்று கட்சி டிக்கெட் கொடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்தால், அங்கே சென்றும் அதைதான் சாப்பிட்டுகொண்டிருப்பார்...

No comments:

Post a Comment