Wednesday, 25 November 2015
Friday, 18 September 2015
வெந்நீர் அருந்துங்கள் என்றும் இளமையாக இருக்கலாம்!!!
என்றென்றும் இளமையாக இருக்க தண்ணீரை அதிகளவில் உட்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என பெரியவர்கள் முதல் மருத்துவர்கள் வரை சொல்லக்கேட்டிருப்போம். ஆனால் மிதமான நீரை பருகுவதை விட வெந்நீரை குடிப்பதால் அதிகளவில் நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரியுமா என்பதே சந்தேகம் தான். தினமும் வெந்நீரை காலையில் அருந்துவது உடல் நலத்திற்கு ஆரோக்கியமானது என கூறுகின்றனர்.
உடலை சுத்தம் செய்யும் இந்த வெந்நீர் வேகமாக வயதாவதையும் குறைத்து இளமையை தக்க வைத்து கொள்ள உதவும். கடும் குளிர்காலத்தில் ஏற்படும்
மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.
மூக்கடைப்பு தொண்டைகட்டிற்கு வெந்நீரை குடிப்பது நலம் தரும். வெந்நீருடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து கொண்டால் இன்னும் சிறந்தது. டீன் ஏஜ் பெண்கள் மற்றும் ஆண்களை தொல்லை செய்யும் முகப்பருக்களும் வெந்நீர் பருகுவதால் சுத்தமாக அகன்றுவிடும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன் முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி நல்ல வளர்ச்சி அடையும். வெந்நீரால் இரத்த ஓட்டம் சீராவது மட்டுமின்றி நரம்பு மண்டலத்தின் ஒரத்தில் உள்ள கொழுப்புகளும் குறைந்துவிடும்.
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும். உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பது தான்.
மதியநேர சாப்பாட்டிற்கு பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது. காலை வேளையில் மலம் எளிதில் வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்...
Saturday, 4 July 2015
Wednesday, 1 July 2015
Friday, 29 May 2015
Wednesday, 27 May 2015
Tuesday, 7 April 2015
Tuesday, 31 March 2015
Saturday, 28 March 2015
Friday, 20 February 2015
மாண்புமிகு.தளபதியார்

சோவியத் சுடரொளியின் பெயர் சூட்டி
தலைவர் கலைஞர் - அன்னை தயாளு அம்மாள் ஆகியோரின் பிள்ளையாய்ப் பிறந்து;
பொதுவுடைமைப் பூமியாம் சோவியத் நாட்டின் சுடரொளி #ஸ்டாலின்அவர்களின் பெயர் தந்தையாரால் எனக்குச் சூட்டப்பட்டு;
சிறு கரம் நீட்டி, குறுகுறு நடக்கும் குழந்தைப் பருவத்திலேயே கொள்கைக் கோட்டமாம் #கோபாலபுரம் சூழலில் வளர்ந்ததால்,
இளமையிலேயே இயக்கத்தின்பால் ஈர்த்திழுக்கப்பட்டு;
திராவிட இயக்கத்திற்கு நாற்றங்கால்களாக #இளைஞர்களைத்திரட்டிடும் இனிய பணியை என் தலை மேல் நானே ஏற்றிக் கொண்டு;
இதுவரை பல கட்டங்களைக் கடந்து, எந்தக் கட்டமாயினும் இயல்பான அதன் மேடு - பள்ளங்களைச் சமமாகப் பாவித்து ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக் கொண்டு;
சென்னை மாநகர நிர்வாகத்திலும், தமிழக அரசின் நிர்வாகத்திலும், தலைவர் கலைஞர் அவர்கள் உவந்தளித்த பொறுப்பினைக் கடமை உணர்வோடு கடிதுழைத்து நிறைவேற்றி;
கழகத்தைக் கண்களாகவும் தலைவர் கலைஞர் அவர்களை கதிரொளியாகவும் கொண்டு, என்னால் இயன்றவரை எல்லோருக்கும் பயனுள்ள வகையில், கனிவு - துணிவு ஆகியவற்றைத் துணையாகக் கொண்டு, தொண்டூழியம் ஆற்றி வரும் எனக்கு மார்ச்-1 அன்று 63வது பிறந்த நாள்!
சங்கடப்படுத்த வேண்டாம்
#1-3-2014 அன்று எனது பிறந்தநாளையொட்டி ஆர்வம் மிகுதியால், ‘பிளக்ஸ்' போர்டுகள், விளம்பரச் சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், பதாகைகள், பேனர்கள் போன்றவற்றை வைத்து என்னைச் சங்கடப்படுத்திவிட வேண்டாம் என்று கழகத் தோழர்களை மிகுந்த கனிவுடனும், கண்டிப்போடும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய கண்ணுறுத்தும் படாடோப விளம்பரங்கள் கட்டாயம் தவிர்க்கப்படுதல் வேண்டும்
அடக்கம் வேண்டும்
நம்முள் அடக்கமும், அமைதியும் தவழ்ந்திட வேண்டும்; ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் வெறுத்து விலக்கிவைத்திட வேண்டும். உற்சாகமும் உத்வேகமும் எல்லை மீறிப் போக அனுமதித்திடக் கூடாது. இனிது இனிது எளிமை இனிது; எளிமையின் ஏற்றம் இயம்பிட அரிது!
இன்று முதல் நமது நிலையும் நினைப்பும் #2016 #சட்டப்பேரவைத்#தேர்தலையே மையம் கொண்டதாக இருந்திட வேண்டும்
தேர்தல் பணிகளைத் தொடங்குங்கள்
இருக்கிறதே ஓராண்டு, என்ன அவசரம் என்று எண்ணிடாமல் இப்போதிருந்தே தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுத் தொய்வின்றித் தொடர்ந்திட வேண்டும். மாற்றத்தை விரும்புகின்றனர் மாநிலத்து மக்கள். எதையெதையோ சொல்லி நம்பவைத்து 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்றவர்கள் எதையும் செய்யாமல் ஏமாற்றி விட்டார்கள்; மக்கள் நலன் மறந்து, அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆணவச் சேட்டையாடி அவரவர் பைகளை நிரப்பிக் கொண்டார்கள்
அர்ச்சுனன் வைத்த அம்புக் குறி போல
நமது நோக்கத்தைச் சிதற விடாமல், வில்லாளன் அர்ச்சுனன் வைத்த அம்புக் குறியைப் போல், ஒருமுகப்படுத்த வேண்டும். தமிழகத்தை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செலுத்திட, கழகத்தை அரியணையில் அமர்த்திட வேண்டும்! அதற்கான சூளுரையை அனைவரும் இன்றே மேற்கொள்ள வேண்டும்! சூளுரை மேற்கொண்டு சுற்றிச் சுழன்று பணியாற்றிடத் தொடங்கினால், அதுவே எனக்கு வழங்கிடும் பிறந்தநாள் வாழ்த்தாகும்
நலிந்த பிரிவினருக்கு உதவுங்கள்
பிறந்த நாளையொட்டி, சமுதாயத்தில் மெலிந்து நலிந்த பிரிவினரான ஏழை எளிய மகளிர், முதியோர், அனாதைச் சிறுவர் - சிறுமியர், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோரின் நலன் பேணும் வகையில் இயன்ற உதவிகளை ஆங்காங்கே இளைஞர் அணியினர் உள்ளிட்ட கழகத் தோழர்கள் செடீநுவதும்; "இளைஞர் எழுச்சி நாள்" பொதுக் கூட்டங்களின் மூலம் பிரச்சாரப் பணியை மேற்கொள்வது; கழகக் கொடிகளைப் புதுப்பிப்பது - புதிய கொடிகளை ஏற்றி வைப்பது - கிளைக் கழகங்களின் பெயர்ப் பலகைகளைப் புதுப்பிப்பது - அண்ணா, கலைஞர் பெயர்களில் அமைந்துள்ள படிப்பகங்களுக்குப் பயனுள்ள புதிய நூல்களை வழங்குவது - கழகத்தின் மூத்த உறுப்பினர்களைச் சிறப்பிப்பது, பெருவாரியாக இரத்தத் தானம் செய்வது போன்றவற்றை ஆற்றுவதுமே அவசியமானவை
நினைவில் கொள்வீர்
இயக்கத்திற்கு ஆக்கமளித்திடும் இத்தகைய செயல்பாடுகளை மட்டுமே நான் பெரிதும் வரவேற்கிறேன்; சமூக உணர்வும், இயக்கப் பற்றும் மிளிரும் இத்தகைய நற்காரியங்கள் எல்லா இடங்களிலும் நிகழுமானால், அவற்றையே என்னருந் தோழர்களின் இதய வாடிநத்துகளாகக் கொண்டு எல்லையிலா மகிழ்ச்சி கொள்வேன்! ஆடம்பரத்தைத் தவிர்த்து ஆக்கப்பூர்வமான பணிகளை அமைதியாக மேற்கொள்வீர்! இந்த எனது அன்பு வேண்டுகோளை எல்லோரும் நினைவில் கொள்வீர் என்று மக்களின் #இதயத்தலைவர் #மாண்புமிகு#தளபதியார் கூறியுள்ளார்
Subscribe to:
Posts (Atom)